4G வேகத்தில் ஏர்டெல் டாப்; 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட ஜியோ!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 04:13 pm
4g-survey-jio-tops-signal-availability-airtel-tops-speed

நாட்டிலுள்ள 4G நெட்வர்க்களின் இணைய வேகம் மற்றும் சிக்னல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு சிக்னல் கிடைக்கும் நெட்வர்க்கில், ஜியோ முதலிடத்தையும்; அதிக இணைய வேகத்தில் ஏர்டெல் முதல் இடத்தையும் பிடித்துள்ளன.

4G சேவைகளை நாட்டின் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இணைய வேகம் மற்றும் சிக்னலின் பலத்தை வைத்தே  வாடிக்கையாளர்கள் நெட்வர்க்களை தேர்ந்தெடுக்கின்றனர். இதுவரை, வேகத்தில் ஜியோ மற்றும் ஏர்டெல், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தன.

சமீபத்தில் இந்தியாவின் 15 மிகப் பெரிய நகரங்கள் உட்பட, பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நெட்வர்க் ஆய்வுகளில், பரவலாக சிக்னல் கிடைக்கும் நெட்வர்க்கில் ஜியோ முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆய்வுசெய்யப்பட்ட 98.8% பகுதிகளில் ஜியோ 4G சிக்னல் கிடைப்பதாகவும்; 90% இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல, இணைய வேகத்தில், 4G உள்ளிட்ட அனைத்து சேவைகளிலும் சேவைகளிலும் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திதை வோடபோன் பிடித்துள்ளது. சமீப காலமாக முதலிடத்தில் இருந்து வந்த ஜியோ இந்தமுறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close