தங்கம் விலையில் அதிரடி மாற்றம்! நேற்று ஒரே நாளில் ரூ.224 அதிகரிப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Feb, 2019 02:08 pm
gold-rate-increased

சமீபகாலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை 224 ரூபாய் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச பொருளாதாரம், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு சவரன் (22 கேரட்) தங்கம் ரூ.25,336க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்துள்ளது. அதே போல 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 27,600க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கத்தின் விலை நேற்றை விட ரூ.8 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் (22 கேரட்) தங்கம் ரூ.25,344 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3168. 

இன்னும் ஒரு சில மாதங்கள் தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close