அறிமுகமானது விவோ 15 PRO: என்ன ஸ்பெஷல்?

  Newstm Desk   | Last Modified : 21 Feb, 2019 12:58 pm
vivo-15-pro-price-in-india-specifications-features

விவோ 11 PRO வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விவோ 15 PRO நேற்று அறிமுகமாகி உள்ளது. 

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி சீன நிறுவனமான விவோ, நேற்று விவோ வி15 PRO ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பிக்கு என்று பிரத்யேகமாக பாப்-அப் கேமரா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே போல் பாப்-அப் கேமரா ஸ்மார்ட்போன் வெளிவந்தாலும், விவோ வி15 PRO வில் உள்ள பாப்-அப் கேமரா அதிக மெகா பிக்சல் கொண்டதாகவும். உலகில் முதன்முறையாக 32 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் விவோ வி15 PRO தான். 

இது தவிர போனின் பின்புறத்தில் 45 மெகா பிக்சல் கேமராவும் உள்ளது. இதில் 12 எம்பி சென்சார் நுட்பமும் உள்ளது. மேலும், ஃபிங்கர் பிரிண்ட், ஜிபிஎஸ், நேவிகேஷன் சென்சார் தொழில்நுட்பங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 

இதற்கு முந்தைய மாடலான விவோ 11 PRO  ரூ. 25, 990க்கு விற்பனையாகும் நிலையில், விவோ 15 PRO விலை ரூ. 28, 990 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த போன் 6 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி கொண்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close