பிஎஸ்என்எல்-லின் ரூ.599 அதிரடி பிளான்: ஆனால் டேட்டா கிடையாது

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 05:42 pm
bsnl-announces-rs-599-plan-without-data

ஏர்டேல், ஜியோ, வோடபோன் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை வெளியிட்டு வரும் நிலையில், பி.எஸ்.என்.எல் 599 ரூபாய்க்கு டேட்டா இல்லாத ஆஃபரை வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இடையே குறைந்த விலைக்கு இலவச கால் மற்றும் டேட்டா சேவைகளை வழங்க கடும் போட்டி  இருந்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு ஆஃபர்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. 3 மாதங்களுக்கு இலவச கால் மற்றும் டேட்டா என ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வழங்கி வரும் ஆஃபர்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் ரூ.599-க்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த பிளானின் மூலம், பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்று வரும் பிளானின் வேலிடிட்டியை 6 மாதங்கள் நீட்டிக்க முடியும். இதன் மூலம், மும்பை, டெல்லி தவிர மற்ற இடங்களுக்கு இலவச லோக்கல் மற்றும் எஸ்டிடி கால் சேவைகள் வழங்கப்படும். ஆனால், இதில் டேட்டா பிளான் சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.399-க்கு 84 நாட்களுக்கு டேட்டாவுடன் இலவச கால்கள், எஸ்.எம்.எஸ் கொண்ட சலுகைகளை வழங்கி வரும் நிலையில், டேட்டா இல்லாத பிளானை பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் விரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close