ஆண்டிராய்டு Q-வின் பிரிவியூ தயார்

  Newstm Desk   | Last Modified : 14 Mar, 2019 06:20 pm
android-q-is-now-available-for-developer-pixel-devices

ஆண்ட்ராய்டின் அடுத்த இயங்குதளம் Q-வின் முதற்கட்ட அம்சங்கள், பிரிவியூ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பிக்சல் ஸ்மார்ட்போன்களில் சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கான Q-வின் முதற்கட்ட அப்டேட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிகிறது. 

உலகிலேயே அதிக மொபைலைகள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளம், அடுத்த கட்டத்திற்கு திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு Pie, வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது 2019ம் ஆண்டுக்காக ஆண்டிராய்டு Q என்ற பெயருடன் அடுத்த அப்டேட் தயாராகி வருகிறது. 

இந்த அப்டேட்டின் முதற்கட்ட அம்சங்களை கொண்டிருக்கும் மொபைல் ஒன்றின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வழக்கம் போல பிக்சல் மொபைல்களுக்கு மட்டும் இந்த முதற்கட்ட அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாப்ட்வேர் டெவலப்பர்களுக்கு மட்டும் விரைவில் இந்த முதற்கட்ட அப்டேட் கிடைக்குமாம். அதன்பின் இந்த மே மாதம் 7-9 தேதிகளுக்குள், Q-வின் பீட்டா இயங்குதளம் வெளியிடப்பட உள்ளது. 

ஆண்ட்ராய்டு Q-வில், மொபைல் முழுக்க நைட் மோட், ஃபேஸ் ரெகக்னிஷன், டெஸ்க்டாப் வெர்ஷன் உள்ளிட்ட பலவற்றை மெருகேற்றுமாறு சிறப்பம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close