நவீன வசதிகளுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

  முத்துமாரி   | Last Modified : 25 Jun, 2019 05:21 pm
samsung-galaxy-watch-active-with-circular-amoled-screen-launched-in-india

அமோல்டு செய்யப்பட்ட காட்சித்திரையுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (ஜுன் 25) முதல் இந்தியாவில் இந்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனைக்கு வருகிறது. 

இந்த கைக்கடிகாரத்தின் சிறப்பு என்னவென்றால், முக்கியமாக இக்கடிகாரத்தை அணிந்திருப்பவரின் ரத்த அழுத்தத்தை கண்காணிக்க உதவுகிறது. மேலும், வாய்ஸ் சப்போர்ட் அளிக்கக்கூடிய ’பிக்ஸ்பி’ (Bixby) எனும் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும், இது கருப்பு, டார்க் பச்சை, ரோஸ் கோல்டு, சில்வர் ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இது தவிர உடற்பயிற்சியை கண்காணிப்பது, தூக்கம், மன அழுத்தம், உடல்நிலை மாறுபாடுகள் குறித்தும் தெரிந்துகொள்ளும் வசதி இதில் உள்ளது. 

இதன் விலை ரூ.19,990/- அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர்களில் இந்தக் கடிகாரம் கிடைக்கிறது. எடை மிகவும் குறைவாக உள்ளதால் இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். 

1.1 இன்ச் அளவுடன், 360x360 பிக்சலுடன், அமோல்டு செய்யப்பட்ட காட்சித்திரை, கொரில்லா கிளாஸ் 3 ஆகிய வசதிகளை இக்கடிகாரம் கொண்டுள்ளது.  மேலும், 230mAh பேட்டரி, ஓ.எஸ் 4.0, 768MB ரேம், 4GB ஸ்டோரேஜ் கொண்ட இக்கடிகாரம் ப்ளூ டூத், வை-பை, ஜிபிஎஸ் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

newstm.in

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close