உதவி ஜெயிலர் வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! 

  சுஜாதா   | Last Modified : 09 Oct, 2018 11:23 am
post-of-assistant-jailor

சிறைத்துறை நிர்வாக பிரிவில் உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி  மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆண், பெண் என இருபாலரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.


பணி : அசிஸ்டென்ட் ஜெயிலர் 

காலிப் பணியிடம் : 30 

ஆண் : 16 பெண் : 14 

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம். 

வயதுவரம்பு : 18 முதல் 30 வயது வரை (எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.) 

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை 

விண்ணப்ப முகவரி : www.tnpsc.gov.in 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 08.10.2018 முதல் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 07.11.2018 வரை

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 09.11.2018 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 

தேர்வு தேதி : 06.01.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிந்துகொள்ளவும், விண்ணப்பப்படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.  

விபரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf 

குறிப்பு: ஏற்கனவே அரசு பணியில் பதவி வகித்துவரும்  அனுபவமிக்க தகுதி வாய்ந்த அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.      

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close