1313 ரூபாய்க்கு விமான டிக்கெட்; கோ ஏர் நிறுவனத்தின் சூப்பர் ஆஃபர்1

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:13 am
go-air-announces-ticket-price-of-rs-1313

பட்ஜெட் விமான நிறுவனமான கோ ஏர், தனது 13வது ஆண்டை கொண்டாடும் விதமாக, ரூ.1,313 என குறைந்த விலையில், 13 லட்சம் விமான டிக்கெட்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

கோ ஏர் நிறுவனம் அடிக்கடி பல சூப்பர் ஆஃபர்களை வெளியிட்டு வருகிறது. குறைந்த விலையில் பல்வேறு வழித்தடங்களில் விமானங்களை இயக்கி வரும் கோ ஏர், தனது 13வது ஆண்டு விழாவை வெகுவாக கொண்டாட இருக்கிறது. இதற்காக அந்நிறுவனம் விசேஷ ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, கோ ஏர் நிறுவனத்தின் விமானங்கள் பயணம் செய்யும் வழித்தடங்களில் டிக்கெட் ஒன்று ரூ.1313க்கு விற்கப்படுகிறது. 13 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக மொத்தம் 13 லட்சம் டிக்கெட்களை இந்த விலையில் விற்கிறதாம் கோ ஏர்.

"நவம்பர் 5ம் தேதி முதல் நவம்பர் 18ம் தேதி வரை, இந்த ஆஃபர் மூலம் டிக்கெட்கள் விற்கப்படும். கோ ஏர் செயல்படும் அனைத்து வழித்தடங்களிலும் இந்த ஆஃபரை பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யலாம்" என கோ ஏர் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்த ஆண்டு நவம்பர் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் வரையிலான பயணங்களுக்கு இதன் மூலம் டிக்கெட் புக் செய்யலாம்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close