80 லட்சம் பேர் பலன்பெற்ற பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம்

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 12:04 pm

8-5-million-jobs-created-under-government-s-flagship-employment-generation-scheme

பிரதமர் நரேந்திர மோடியின் மைல்கல் திட்டங்களுள் ஒன்றான பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டதின் (the Pradhan Mantri Rojgar Protsahan Yojana (PMRPY)) கீழ் 80 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் (இபிஎப்) புள்ளி விவரங்களின்படி, சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள்,  புதிதாக தொடங்கப்பட்ட திட்டங்கள், கட்டுமானங்கள் அனைத்தும் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 

இந்த திட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டில், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இதில் 40 லட்சம் 25 வயதிற்கும் குறைவான இளைஞர்களை பலன் பெற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் கீழ் பலனடையும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மாதத்திற்கு 15,000 ரூபாய் என்கிற அடிப்படை ஊதியத்துடன், அவர்களது ஈ.பி.எஃப் பங்களிப்பாக 12% வைக்கப்படுகிறது. முன்னதாக ஈ.பி.எஃப் வைப்பு நிதி 8.33% ஆக இருந்தது. ஜவுளித் துறையில், இது 12% ஆகவே நீடிக்கிறது. 

உலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்தல் தரவரிசையில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி விரைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு முன் இருந்ததை விட இன்று ஒரு புதிய வர்த்தகத்தைத் தொடங்குவது எளிதாகியுள்ளது. தேவையற்ற உடன்படிக்கைகள் நீக்கப்பட்டு, ஏராளமான அனுமதிகளை இணையதளம் மூலமாக பெறலாம்.

தொழில் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொழிற்சாலை முனைவு உடன்படிக்கை இணையதளத்தில் அளிக்கப்பட்டு, இந்த சேவைகள் வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணி நேரமும் தொழில்முனைவோருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றை சாளர இணையத்தில் செயல்படுவதால் பல்வேறு அரசுகள் மற்றும் அரசு முகமைகளிடமிருந்து ஒப்புதல்களை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.

சுமார்  5.8 கோடி அளவிலான வகைப்படுத்தப்படாத நிறுவனங்கள் 12.8 கோடி வேலை வாய்ப்புகளை உருவவாக்கியுள்ளன. இவற்றில் பலன் பெற்றுள்ளவர்களில் 60 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதில் 40 சதவிகிதம்  நிறுவனங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராலும் 15 சதவிகிதம் நிறுவனங்கள் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினராலும் நடத்தப்படுகிறது. ஆனால் அவர்களது நிதியில் வங்கிகளின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வங்கிக் கடனையும் பெறவில்லை. அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் முக்கிய துறைகள் குறைந்த அளவு கடனையே பெற்றுள்ளது என்றும் இதனைக் கூறலாம். இந்த நிலையை மாற்ற அரசு, பிரதம மந்திர முத்ரா திட்டத்தையும் முத்ரா வங்கியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.