குரூப் 4  சான்றிதழ் சரிபார்க்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு

  டேவிட்   | Last Modified : 02 Dec, 2018 12:19 am
group-iv-verification-of-certificates

குரூப் 4 தேர்வில் தேர்ச்சியடைந்தோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பானது வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 3) முதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

குரூப்-4 பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற்றது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரங்கள் கடந்த  ஜூலை மாதம் 30ஆம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இத்தேர்வு தொடர்பான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தமிழ்நாடு தேர்வாணைய அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 3) முதல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசை மற்றும் அழைப்புக் கடிதம் டிஎன்பிஎஸ்சி-யின் www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close