8வது பாஸ் பண்ணா போதும்... அரசு வேலை ரெடி !

  டேவிட்   | Last Modified : 14 Dec, 2018 12:13 am
8th-pass-government-job-ready-for-you

தமிழக அரசின் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

கோவை, திருப்பூர், குன்னூர், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

அரசு தொழிலாளர் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தேவையான பணிகளில் உதவி செய்தல். சம்பளம். ரூ.15,700 - ரூ.50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளாகும். 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஒட்ட தெரிந்திருக்க வேண்டும். 01.07.2018 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

மேற்கண்ட பணிக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் http://www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பிப்பவர்கள், கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், டாக்டர் பாலசுந்தரம் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக வளாக பின்புறம், கோயம்பத்தூர் - 18 என்ற முகவரிக்கு டிசம்பர் 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, தபாலிலோ அனுப்ப வேண்டும்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close