SSC Phase VI தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 12:22 pm

ssc-selection-posts-phase-vi-exam-admit-card-2018-19-out

எஸ்.எஸ்.சி (பணியாளர்கள் தேர்வு ஆணையம்) செலக்ஷன் பதவிகளுக்கான SSC Phase VI தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது. 

எஸ்.எஸ்.சி எனப்படும் பணியாளர்கள் தேர்வு ஆணையம்(The Staff Selection Commission) தேர்வுகளை நடத்தி தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுத்து, மத்திய அரசில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட எஸ்.எஸ்.சி (பணியாளர்கள் தேர்வு ஆணையம்) செலக்ஷன் பதவிகளுக்கான SSC Phase VI தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தேர்வர்கள் தங்களுக்கான நுழைவுச் சீட்டை பெற https://ssc.nic.in/ என்ற இணையதளத்தை அணுகவும். தொடர்ந்து, தாங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த region வெப்சைட்டிலும் நுழைவுச் சீட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம். அதாவது தேர்வு மையம் தென்மண்டலத்தை(Southern Region) தேர்ந்தெடுத்தால் http://www.sscsr.gov.in/ என்ற இணையத்தளத்தை காணவும். 

மேலும், இந்த தேர்வு தொடர்பான இதர விபரங்களை பெற  https://ssc.nic.in/ என்ற இணையதளத்தை அணுகலாம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close