சி.ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 05:05 pm
ca-foundation-final-and-cpt-results-releasing-tomorrow

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்(ஐசிஏஐ), சி.ஏ பைனல், சி.ஏ பவுண்டேஷன், சி.பி.டி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கின்றன.

ஆடிட்டர் பதவி படிப்புக்கான சி.ஏ தேர்வின் இறுதித்தேர்வு(Final) கடந்த நவம்பர் 1,3,5,9,11,13,15,17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  அதேபோன்று சி.ஏ பவுண்டேஷன்(CA Foundation) தேர்வுகள் கடந்த நவம்பர் 11,13,15,17 ஆகிய தேதிகளிலும், சி.ஏ -சிபிடி(CPT) தேர்வு கடந்த டிசம்பர் 16ம் தேதியும் நடைபெற்றது. 

இந்நிலையில் இந்த மூன்று தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள ஐசிஏஐ-இன் அதிகாரபூர்வ இணையதளமான icaiexam.icai.org என்ற இணையதளத்தை காணவும். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close