10வது படித்தவர்களா..? ரூ.26,000 சம்பளத்தில் வேலை !

  Newstm Desk   | Last Modified : 30 Jan, 2019 06:09 pm
job-at-breaks-india-pvt-ltd

பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் கம்பெனியில், இன்ஜினியரிங் பயிற்சி (Graduate Engineer Trainee - GET 2019) பெற வரும் 2ஆம் தேதி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெக்கானிக்கல், தயாரிப்பு, ஆட்டோமெபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு ரூ.26,000 முதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு (85% மதிப்பெண்கள்), டிப்ளோமா (85% மதிப்பெண்கள்), பி.இ./பி.டெக். (80% மதிப்பெண்கள்) படித்தவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். ஆங்கில வழிக் கல்வி முறையில் பயிற்சி அளிக்கப்படும். 

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 02/02/2019 அன்று காலை 8.00 மணிக்கு பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பாடி, சென்னை-50 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும். தொலைபேசி: 044-26526707 / 6709. அன்று மாலையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் பெயர்கள் அறிவிக்கப்படும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close