தமிழக அரசில் 520 காலிப் பணியிடங்கள்...!

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 06:07 pm
520-vacancies-in-tamilnadu-government

தமிழக அரசின் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

520 காலிப் பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.350 மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.700 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.  www.mrb.tn.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.02.2019.  மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_SNCU_Notification_06022019.pdf அல்லது www.mrb.tn.gov என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close