ஆவின் நிறுவனத்தில் வேலை.. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 3

  டேவிட்   | Last Modified : 22 Feb, 2019 07:38 pm
job-in-kanchipuram-tiruvallur-aavin

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் (பொறியாளர்) பணியிடங்களுக்கு,  பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மொத்த காலியிடங்கள் - 2. மாத சம்பளம்: ரூ.37,700/-

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 30 வயதிற்குள் இருத்தல் அவசியம்.  விண்ணப்பக்கட்டணம் ரூ.250ஐ "The General Manager, K.T.D.C.M.P.U. Limited", என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பப்படிவங்களை  www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் வரைவோலை மற்றும் அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து, பொது மேலாளர், K.T.D.C.M.P. Union Limited, 55 குருவப்பா தெரு, அயனாவரம், சென்னை 600012 என்ற முகவரிக்கு மார்ச் 3ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  மேலும் விவரங்கள் அறிய http://aavinmilk.com/hrkt130219.html என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close