செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

  டேவிட்   | Last Modified : 27 Feb, 2019 07:37 pm
deadline-extended-for-nursing-application

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள்  ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்,  இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 27 என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி மார்ச் 1 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் வரும் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.  மேலும், செவிலியர் பணிக்கான போட்டித் தேர்வு திட்டமிட்டபடி, வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு  mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close