இந்திய உணவுக் கழகத்தில் வேலை... விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி...!

  Newstm Desk   | Last Modified : 02 Mar, 2019 01:10 pm
jobs-in-food-corporation-of-india

ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் இந்திய உணவுக் கழகத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய உணவுக் கழகத்தில் ஸ்டெனோகிராஃபர், ஹிந்தி டைப்பிஸ்ட், ஜெனரல் அசிஸ்டென்ட், அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், டெக்னிக்கல்  அசிஸ்டென்ட், டெப்போ உதவியாளர் என பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4, 103 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் தென்மண்டலத்தில் மட்டும் 540 இடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், http:// fci.gov.in/recruitment/current _ recruitment.php என்ற இணையதள முகவரியில் மட்டும், வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்  ரூ.500.

குறிப்பிட்ட பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களையும் மேற்கண்ட இணையதள முகவரியிலேயே பெறலாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close