10-ம் வகுப்பு தேர்ச்சியா? வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள் !

  டேவிட்   | Last Modified : 09 Mar, 2019 09:21 pm
10th-pass-apply-for-bank-job

விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 421  அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அனைத்து மாநிலங்களிலும் உள்ள விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள 421  அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கா விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், அந்தந்த மாநிலங்களின் அலுவலக மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம்.  18 முதல் 26 வயதிற்குள் இருப்போர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.150, மற்ற பிரிவினருக்கு ரூ.50 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் http://www.vijayabank.com என்ற இணையதளத்தின் மூலம் 14.04.2019க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய https://www.vijayabank.com/Careers/Careers-List என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close