5ஆம் வகுப்பு பாஸ் பண்ணா போதும்... ரூ.15000 சம்பளத்தில் அரசு வேலை !

  டேவிட்   | Last Modified : 10 Mar, 2019 09:32 am
job-at-villupuram-district-court

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள 52 காலிப் பணியிடங்களுக்கு,  தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றத்தில் பதிவறை எழுத்தர் (10ஆம் வகுப்பு தேர்ச்சி), அலுவலக உதவியாளர் (8ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம்), இரவு காவலர் (5 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம்), துப்புரவுப் பணியாளர் ( 5ஆம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய காலிப்பணியிடங்களக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மாத சம்பளம்: ரூ.15,700 - 50,000.

வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.  எழுத்துத் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பங்களை  www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து,  தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், விழுப்புரம் என்ற முகவரிக்கு மார்ச் 18ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய http://www.districts.ecourts.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close