10வது பாஸா? தெற்கு ரயில்வேயில் 9579 காலிப் பணியிடங்கள் !

  Newstm Desk   | Last Modified : 18 Mar, 2019 01:19 pm
10th-pass-job-in-indian-railways

நாடு முழுவதுதிலும் உள்ள ரயில்வே துறையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 69 பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என இந்திய ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் மொத்த காலியிடங்கள்: 103769. தெற்கு ரயில்வேயில் மட்டும் 9579 காலிப் பணியிடங்கள் உள்ளன.  பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது தேசிய தொழில் பழகுநர் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், என்சிவிடி, எஸ்சிவிடி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.   

01.07.2019 தேதியின்படி பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும், அரசு விதிகளின் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் மூலம் 12.4.2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf இணையதளம் மூலம் அறிந்துகொள்ளவும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close