டிவி சேனலில் ஆங்கர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

  விசேஷா   | Last Modified : 26 Jun, 2019 10:56 am
job-opportunities-in-dd-news

டிடி எனப்படும் துார்தர்ஷன் சேனல் ஆங்கர், கோ ஆர்டினேடர், கேமராமேன், காபி ரைட்டர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

டிடி நியூஸ் சேனலில், நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி ஆசிரியர், விருந்தினர்களை கையாளும் அலுவலர், கேமரா மேன், வீடியோ எடிட்டர் உள்ளிட்ட, 89 காலிப் பணியிடங்களை நிரப்ப, துார்தர்ஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இதற்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், மாஸ் கம்யூனிகேஷன் அல்லது ஜர்னலிசத்தில் பட்டம் அல்லது படயம் பெற்றிருக்க வேண்டும். அடுத்த மாதம், 12ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட பல அம்சங்கள் அறியவும், விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும், http://ddnews.gov.in/about/opportunities என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close