பங்குச்சந்தை சென்செக்ஸ் 176 புள்ளிகள் உயர்வு, 10,500யை தாண்டிய நிஃப்டி

  முத்துமாரி   | Last Modified : 04 Jan, 2018 04:34 pm


பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 176.26 புள்ளிகள் உயர்ந்து 33,969.64 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 33,980.94 என அதிகரித்து காணப்பட்டது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 61.60 புள்ளிகள் உயர்ந்து 10,504.80 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக இறுதியில் 10,506.30 ஆக இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, டாடா ஸ்டீல், எல்&டி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், டாடா பவர்  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close