சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனை!

  முத்துமாரி   | Last Modified : 17 Jan, 2018 04:10 pm


பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அதிகபட்ச புள்ளிகளை எட்டி இன்று புதிய சாதனை படைத்துள்ளன. 

சமீபமாக பங்குச்சந்தைகள் பெரும்பாலாக அதிகரித்த வண்ணம் உள்ளன. சென்செக்ஸ் இன்று 310.77 புள்ளிகள் அதிகரித்து 35,081.82 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 35,114.36 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது. இதன்மூலம் சென்செக்ஸ் 35,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,800 புள்ளிகளை கடந்து சாதனையை எட்டியுள்ளது. இன்று நிஃப்டி 88.10 புள்ளிகள் உயர்ந்து 10,788.55 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,803.80 என இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், இன்போசிஸ், அதானி போர்ட்ஸ், எஸ் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. விப்ரோ, ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close