பங்குச்சந்தை சாதனை! சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு!

  முத்துமாரி   | Last Modified : 23 Jan, 2018 04:29 pm


தொடர்ந்து ஏற்றம் கண்டுவரும் பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 36,000 புள்ளிகளை கடந்தும், நிஃப்டி 11,000 புள்ளிகளை கடந்தும் சாதனை படைத்துள்ளன

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 341.97 புள்ளிகள் அதிகரித்து 36,139.98 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. வர்த்தக நேர இறுதியில் அதிகபட்சமாக 36,160.58 என்ற புள்ளிகளை எட்டியது. 

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 117.50 புள்ளிகள் உயர்ந்து 11,083.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 11,092.90 என்ற புள்ளிகளை தொட்டது. 

இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ  வங்கி, கோல் இந்தியா, ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி, ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ்  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close