சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்வு.. 11,100 புள்ளிகளை தாண்டிய நிஃப்டி..

  முத்துமாரி   | Last Modified : 29 Jan, 2018 03:51 pm


வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 232.81 புள்ளிகள் உயர்ந்து 36,283.25 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. பிற்பகலில் அதிகபட்சமாக 36,443.98 என்ற புள்ளிகளை எட்டியது. 

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 60.75 புள்ளிகள் உயர்ந்து 11,130.40 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 11,171.55 என காணப்பட்டது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, மாருதி, வேதாந்தா, ஈச்சர், டாடா ஸ்டீல், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஓஎன்ஜிசி, பாரத் பெட்ரோலியம்  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close