இறக்கத்தை கண்ட பங்குச்சந்தைகள்!

  முத்துமாரி   | Last Modified : 30 Jan, 2018 04:29 pm


மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 249.52 புள்ளிகள் குறைந்து 36,033.73 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. பிற்பகலில் அதிகபட்சமாக 36,141.96 என்ற அளவில் காணப்பட்டது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 80.75 புள்ளிகள் குறைந்து 11,049.65 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 11,120.85 என்ற புள்ளிகளை தொட்டது. 

இன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளன.  டாக்டர் ரெட்டி லேப்ஸ், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.