இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் சரிவு!

  முத்துமாரி   | Last Modified : 31 Jan, 2018 04:35 pm


தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 68.71 புள்ளிகள் குறைந்து 35,965.02 என்று முடிந்தது. இன்றைய வர்த்தகத்தின்போது, அதிகபட்சமாக 35,993.27 என்ற அளவுக்கு சென்றது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 21.95 புள்ளிகள் குறைந்து 11,027.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 11,047.05 என்ற புள்ளிகளை தொட்டது. 

இன்றைய வர்த்தக நிலவரப்படி, கோட்டக் மஹிந்திரா பேங்க், ரிலையன்ஸ், எச்டிஎப்சி, இண்டஸ்இண்ட், பேங்க், டெக் மஹிந்திரா  உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்துள்ளன.  டாக்டர் ரெட்டி லேப்ஸ், டாடா ஸ்டீல், சன் பார்மா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close