வரலாறு காணாத அளவில் பங்குச்சந்தைகள் சரிவு!

  முத்துமாரி   | Last Modified : 02 Feb, 2018 03:57 pm


நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து பங்குச்சந்தைகள் வரலாறு காணாத இறக்கத்தை சந்தித்துள்ளன. இன்றைய காலை நிலவரப்படியே சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் இறங்கியது. 

இந்நிலையில் இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 839.91 புள்ளிகள் குறைந்து 35,066.75 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.  அதிகபட்சமாக காலை நேரத்தில் 35,738.13 என்ற அளவில் காணப்பட்டது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 256.30 புள்ளிகள் குறைந்து 10,760.60 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,954.10 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது. 

டிசிஎஸ், விப்ரோ நிறுவன பங்குகள் விலை சிறிது அதிகரித்தாலும், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் என பெரும்பாலான  நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று குறைந்தன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close