பங்குச்சந்தை சரிவு: சென்செக்ஸ் 400 புள்ளிகள் குறைந்தன!

  முத்துமாரி   | Last Modified : 09 Feb, 2018 04:28 pm


இன்று மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 407.40 புள்ளிகள் குறைந்து 34,005.76 என இருந்தது. அதிகபட்சமாக இன்றைய வர்த்தக நேர முடிவில் 34,070.73 என்ற புள்ளிகளை தொட்டது. 

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 121.90 புள்ளிகள் குறைந்து 10,454.95 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,480.20 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது. 

இன்றைய வர்த்தகத்தின்போது, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. விப்ரோ, எஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பாரதி  ஏர்டெல், எல்&டி உள்ளிட்ட பெரும்பாலான  நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close