பங்குச்சந்தைகள் ஏற்றம்: சென்செக்ஸ் 322 புள்ளிகள் அதிகரிப்பு

  முத்துமாரி   | Last Modified : 23 Feb, 2018 04:33 pm


பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடியினால் பங்குச்சந்தை நிலவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது பங்குச்சந்தை நிலவரம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தை சந்தித்தன.

இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 322.65 புள்ளிகள் அதிகரித்து 34,142.15 என்ற புள்ளிகளில் நிறைவு பெற்றது. அதிகபட்சமாக வர்த்தகம் முடியும் நேரத்தில் 34,167.60 என்ற புள்ளிகளை தொட்டது. 

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 108.35 புள்ளிகள் அதிகரித்து 10,491.05 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,499.10 என்ற புள்ளிகளை எட்டியது.

மேலும் இன்று டாடா ஸ்டீல், சன் பார்மா, எஸ் பேங்க், டாக்டர் ரெட்டி லேப்ஸ், பாரதி ஏர்டெல், ஓஎன்ஜிசி, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஏசியன் பெயிண்ட்ஸ். கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், எம்&எம், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close