• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

பங்குச்சந்தைகள் கடும் சரிவு; சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தன

  முத்துமாரி   | Last Modified : 16 Mar, 2018 05:21 pm


வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. 

இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 509.54 புள்ளிகள் குறைந்து 33,176.00 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. வர்த்தக தொடக்கத்தில் 33,691.32 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்ஃடி 165.00 புள்ளிகள் குறைந்து 10,195.15 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 

கோட்டக் மகிந்திரா பேங்க், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப்  இந்தியா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறைந்தன. ஏசியன் பெயிண்ட்ஸ், எம்&எம், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.

உ.பி, பீகார் இடைத்தேர்தல் முடிவுகள், அரசியல் குழப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக பங்குச்சந்தை இறக்கம் கண்டுள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
[X] Close