இன்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன

  முத்துமாரி   | Last Modified : 01 Mar, 2018 03:51 pm


இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 137.10 புள்ளிகள் குறைந்து 34,046.94 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தகம் முடியும் நேரத்தில் 34,278.63 என்ற புள்ளிகளை தொட்டது. 

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 34.50 புள்ளிகள் குறைந்து 10,458.35 என்ற புள்ளிகளில் முடிந்தது. அதிகபட்சமாக 10,525.50 என்ற புள்ளிகளை எட்டியது.

மேலும் இன்று டாடா ஸ்டீல், சன் பார்மா, பாரதி ஏர்டெல், பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், இண்டஸ்இண்ட் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close