கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்; 10,000க்கு குறைவான நிப்ஃடி புள்ளிகள்

  முத்துமாரி   | Last Modified : 23 Mar, 2018 04:31 pm


இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்த வருடத்தில் முதல் முறையாக நிப்ஃடி புள்ளிகள் 10,000யை விட குறைந்தன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 409.73 புள்ளிகள் குறைந்து 32,596.54 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக காலை நேரத்தில் 32,720.03 என்ற அளவில் இருந்தது. 

அதேபோல் தேசியப்பங்குச்சந்தை நிப்ஃடி 116.70 புள்ளிகள் குறைந்து 9,998.05 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. இதன்மூலம் இந்த வருடத்தின் முதல் முறையாக 10,000க்கும் குறைவான புள்ளிகளில் நிப்ஃடி முடிவு பெற்றுள்ளது. அதிகபட்சமாக இன்று காலை 10,027.70 என்ற அளவில் காணப்பட்டது. 

இன்றைய வர்த்தக நிலவரப்படி, இன்ஃபோசிஸ், கோல் இந்தியா, தேசிய அனல் மின் கழகம், எம்&எம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிது அதிகரித்தன. அதே நேரத்தில் எச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close