பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 11:52 am

sensex-extends-gains-over-300-points

மும்பை பங்குசந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் தொடங்கியது. 07-07-2018, இன்று பகல் 11.17 மணியளவில் 321.32 புள்ளிகள் உயர்ந்து 35,497.32 ஆக இருந்தது. தேசிய பங்குசந்தை நிஃப்டி 94.35 புள்ளிகள் உயர்ந்து 10,778.85ஆக இருந்தது. 

முன்னதாக நேற்று 3 தினங்களுக்கு தொடர் சரிவை சந்தித்து வந்த பங்குசந்தைகள் ஏற்றத்தை சந்தித்து, வர்த்தகத்தின் இறுதியில் நேற்று சென்செக்ஸ் 35,178.88ஆகவும், நிஃப்டி 10,685.65ஆகவும் இருந்தது. இன்று பெரும்பாலும் வங்கிகளின் பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன. 

சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 29,420ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை 31,510 ஆகவும் உள்ளது. 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 67.07ஆக உள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 0.09 பைசா குறைந்து ரூ. 80.59க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ. 72.56க்கு விறக்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close