தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தைகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,278.38 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகலில் 35,628.49 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 284.20 புள்ளிகள் உயர்ந்து 35,463.08 என்ற கணக்கில் முடிவுற்றது.
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 10,722.60 என்ற புள்ளிகளில் தொடங்கி, அதிகபட்சமாக 10,818 என்ற புள்ளிகளை எட்டியது. இறுதியில் 83.70 புள்ளிகள் உயர்ந்து 10,768.35 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.
இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கோல் இந்தியா, இண்டஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.