வாரத்தின் முதல்நாளான இன்று(11.06.2018) மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. 35,472.59 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் காலை 10.48 மணியளவில் 152 புள்ளிகள் வரை அதிகரித்து 35,596.66 ஆக அதிகரித்தது.
அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டி, 10,781.85 புள்ளிகளில்தொடங்கியது. பின்னர், 10.48 மணி அளவில், 50 புள்ளிகள் வரை அதிகரித்து 10,818.65 என்ற அளவில் காணப்பட்டது.
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 79.48க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் ரூ. 71.73க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்: சென்னையில் 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 23,656க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ. 24,840க்கு விற்கப்படுகிறது.