200 புள்ளிகள் வரை ஏற்றம் கண்ட சென்செக்ஸ்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 01:12 pm
sensex-up-over-200-points-banks-gained

மும்பை பங்குச்சந்தை சென்செக்‌ஸ் 200 புள்ளிகள் வரை ஏற்று கண்டு வர்த்தகமாகி வருகிறது. 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 35,525.30 ஆக தொடங்கியது. தொடக்கம் முதலே ஏற்றம் கண்டு பகல் 12.05 மணியளவில் 215.86 புள்ளிகள் அதிகரித்து 35,699.33 ஆக இருந்தது. 

தேசிய பங்குச்சந்தை  குறியீடான நிஃப்டியும் இன்று ஏற்றத்தை கண்டது. 10, 816.15ஆக தொடங்கிய நிஃப்டி பகல் 12.05 மணியளவில் 58.90 புள்ளிகள் உயர்ந்து 10, 845.36ஆக வர்த்தகமாகி வருகிறது. 

பங்குசந்தையில் இன்று வங்கிகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. குறிப்பாக சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் தற்போது வரை ஏற்றத்தை கண்டுள்ளன.  

சென்னையில் ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ.24824.00க்கும், 22 கேரட் தங்கம் ரூ. 23640.00க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.44 ஆக உள்ளது. 

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு  13 பைசா குறைந்து ரூ.79.33ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு விலை 11 பைசா குறைந்து ரூ.71.62ஆகவும் உள்ளது. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 67.44ஆக இருக்கிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close