பங்குச்சந்தை சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிவு!

  Newstm Desk   | Last Modified : 14 Jun, 2018 04:55 pm

sensex-down-139-pts-nifty-closes-near-10-800

வாரத்தின் மூன்று நாட்களும் ஏற்றத்தை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று இறக்கம் கண்டுள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று தொடக்கத்திலே இறக்கத்தை சந்தித்தது. காலையில் 35,743.10 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 139 புள்ளிகள் சரிந்து 35,599.82 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,832.90 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 48 புள்ளிகள் சரிந்து 10,808.05 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, சன் பார்மா, எஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.  ஐசிஐசிஐ பேங்க், அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close