பங்குச்சந்தை முடிவு...பார்மா நிறுவன பங்குகள் விலை உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 04:13 pm

sensex-ends-marginally-higher-nifty-also-just-10-pts-higher

இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்தை சந்தித்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலையில் 35,656.26 என்ற புள்ளிகளில் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில், 22.32 புள்ளிகளே அதிகரித்து 35,622.14 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 
 
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி காலையில் 10,808.65 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 10 புள்ளிகளே உயர்ந்துள்ளது. இறுதியில் 10,817.70 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 10,834யைத் தொட்டது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், டிசிஎஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை சிறிது அதிகரித்துள்ளன.அதே நேரத்தில் ஓஎன்ஜிசி, எஸ் பேங்க், கோல் இந்தியா, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close