பங்குச்சந்தை முடிந்தது! சென்செக்ஸ் 74 புள்ளிகள் சரிவு

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 04:33 pm
sensex-down-74-points-nifty-closes-near-10-800

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் இறக்கம் கண்டுள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,698.43 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஏற்றமும், இறக்கமுமாக சென்ற சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில், 73.88 புள்ளிகள் சரிந்து 35,548.26 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,830.20 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 17.85 புள்ளிகள் சரிந்து  10,799.85ல் வர்த்தகமானது. அதிகபட்ச புள்ளிகளாக தொடக்கத்தில் 10,830.20 என காணப்பட்டது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி, தேசிய அனல் மின் கழகம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை அதிகரித்தும், டாக்டர் ரெட்டி லேப்ஸ், டிசிஎஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவன பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close