22-06-2018 சென்செக்ஸ் 257 புள்ளிகள் உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 04:42 pm

sensex-climbs-257-pts-nifty50-settles-at-10-822

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிவுற்றன. இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்தை  சரிசமமாக சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 35,428.42 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 257.21 புள்ளிகள் அதிகரித்து 35,689.60 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தக நேர முடிவில், 35,571.37 என்ற அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டது. 

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,742.70 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 8.75 புள்ளிகள் உயர்ந்து 10,821.85ல் வர்த்தகமானது. 

மேலும், இன்றைய வர்த்தக நிலவரப்படி, சன் பார்மா, எம்&எம், எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் பேங்க், தேசிய மின் அனல் மின் கழகம், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. அதிகபட்சமாக சன் பார்மா பங்குகள் 4.20% வரை அதிகரித்தன. அதே நேரத்தில் ரிலையன்ஸ், விப்ரோ, கோல் இந்தியா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் விலை குறைந்தன. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close