28-06-2018 பங்குச்சந்தைகள் தொடர் சரிவு!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 05:21 pm
sensex-falls-180-pts-nifty-slips-below-10-600

பங்குச்சந்தைகள் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக படுசரிவை சந்தித்துள்ளன. 

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,207.19 என்ற புள்ளிகளில் தொடங்கி 35,037.64 என்ற புள்ளிகளில் முடிவுற்றது.  நேற்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 272 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று 179 புள்ளிகள் குறைந்துள்ளன.  

அதேபோன்று தேசிய பங்குச்சந்தை அளவீடான நிஃப்டி 10,660.80 புள்ளிகளில் தொடங்கி, இறுதியில்  82.30 புள்ளிகள் சரிந்து  10,589.10ல் வர்த்தகமானது. 

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, எம்&எம், தேசிய அனல்மின் கழகம் , பாரதி ஏர்டெல், கோட்டக் பேங்க், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை சிறிது அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கோல் இந்தியா,  ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close