வாடிக்கையாளர்களை கவரும் அமேசானின் ஷாப்பிங் திருவிழா

  திஷா   | Last Modified : 12 Jul, 2018 04:21 pm
get-ready-for-amazon-prime-day

ஷாப்பிங் பிடிக்காது என்று யாருமே சொல்ல மாட்டார்கள். துக்கத்தில் ஷாப்பிங் செய்து மனதை மகிழ்ச்சியாக மாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கடை கடையாக ஏறி இறங்கி, பிடித்ததை தேர்வு செய்து, ஒரு வேளை அதன் விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடைக்காரரிடம் பேரம் பேசி வாங்குவதற்குள் (பெரும்பாலான கடைகளில் இப்போது ஃபிக்ஸ்டு ப்ரைஸ் தான் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்) அப்பாடா என்றாகி விடும். 

ஆனால், ஃப்ரெண்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மசால் தோசையை ஆர்டர் செய்து விட்டு உட்கார்ந்திருக்கும் தருணத்தில், பேருந்து பயணத்தில் என நீங்கள் இருந்த இடத்தில் விருப்பப் பட்டதை வாங்க முடியும். எப்படி என்கிறீர்களா? உங்களிடம் ஒரு ஸ்மார்ட் ஃபோன் மட்டும் இருந்தால் போதும், அலட்டிக் கொள்ளாமல் ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம். 

ஆடி மாதத்தையொட்டி கடைகளில் எப்படி தள்ளுபடி போடுகிறார்களோ, அதே மாதிரி ஆன்லைனிலும் ஆடித் தள்ளுபடி உண்டு. ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுகளின் முதன்மையானதான அமேசானில் ஜூலை 16 ஆம் தேதி அமேசானின் ப்ரைம் தின ஷாப்பிங் நடக்கவிருக்கிறது. 16ம் தேதி மதியம் 12 மணி முதல், அடுத்த நாள் நள்ளிரவு 12 மணி வரை இந்த ப்ரைம் தின விற்பனை களைகட்ட இருக்கிறது. தொடர்ந்து 36 மணி நேரம் நடைப்பெறும் இந்த விற்பனையில், அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக தள்ளுபடிகளும் தயாராகி வருகின்றன. 

இந்தியாவில் இந்த ப்ரைம் தின ஷாப்பிங் இரண்டாவது முறையாக நடக்கிறது. இந்த விற்பனையில் 200-க்கும் மேற்பட்ட பிராண்டுகளை அறிமுகப்படுத்த இருக்கிறார்கள் அமேசான் நிறுவனத்தினர். தவிர, உலகின் பல முன்னணி பிராண்டுகளும், சத்யா பால் முதல் தி சென்னை சில்க்ஸ் என உள்ளூர் பிராண்டுகளும் விற்பனைக்கு வர உள்ளன. அப்புறம் என்ன பர்ஸை மட்டும் வெயிட்டா வச்சுக்கோங்க!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close