ட்ரில்லியன் டாலர் நிறுவனமானது அமேசான்!

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2018 05:50 am

amazon-is-now-the-second-trillion-dollar-us-company

அமெரிக்க ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 1 ட்ரில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.72 லட்சம் கோடி மதிப்பை கடக்கும் இரண்டாவது அமெரிக்க நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.

சமீபத்தில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர்களை (1 லட்சம் கோடி டாலர்) கடந்தது. இந்நிலையில், நேற்று காலை அமேசான் நிறுவன பங்குகளின் மதிப்பு 2050.49 டாலர்களை தொட்டது. அமேசானின் பங்குகள் 1.5% உயர்ந்ததால் அந்நிறுவன பங்குகள் 1 லட்சம் கோடி டாலர்களை முதல்முறையாக கடந்தது. 

ஏற்கனவே, அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்தார். அமேசானின் 16% பங்குகளை பெஸோஸ் வைத்துள்ளார். அவரது சொத்துக்களின் மதிப்பு, சுமார் 11 லட்ச ரூபாயாகும். ஆப்பிள், அமேசான் நிறுவனங்களை தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனான ஆல்ஃபாபெட் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் ட்ரில்லியன் டாலர் மதிப்பை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close