கடந்த மாத மொத்தவிலை பணவீக்கம் 5.13 சதவீதமாக உயர்வு

  Newstm Desk   | Last Modified : 15 Oct, 2018 02:59 pm
wholesale-inflation-price-index-increases-from-september

நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதம் இருந்த 4.53 சதவீதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும் மொத்தவிலை பணவீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்திர பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் 4.53 சதவீதமாக இருந்து, கடந்த மாதம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு இருந்த பணவீக்கத்தை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஒவ்வொரு மாதத்தின் மொத்தவிலை பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் வருடாந்திர பணவீக்கம், ஆகஸ்ட் மாதம் 4.53 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் 5.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு இதே மாதம் இருந்த 3.14 சதவீதத்தை விடவும் அதிகரித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close