தேர்தல் கருத்துக் கணிப்பு எதிரொலி: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்

  Newstm Desk   | Last Modified : 10 Dec, 2018 01:49 pm
exit-poll-impact-nifty-under-10-600-mark-on-monday

தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக, தேசிய மற்றும் மும்பைப் பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை சரிவுடனே தொடங்கின.

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை முடிவுகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெள்ளிக்கிழமை வெளியாகின.

அதன் எதிரொலியாக, வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை, தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறிப்பீட்டு எண் 143.40  புள்ளிகள் குறைந்து 10,550.30 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்  503.86 புள்ளிகள் குறைந்து, 35, 169.39 புள்ளிகளுடன் வணிகம் தொடங்கியது.

இதேபோல், சனிக்கிழமை ரூ.70.80 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, திங்கள்கிழமை 54 பைசாக்கள் குறைந்து ரூ. 71.34-ஆக இருந்தது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close