சென்னையில் ரூ.1.44 குறைந்த பெட்ரோல் விலை!

  Newstm Desk   | Last Modified : 29 Dec, 2018 11:42 am
petrol-price-down-continuously-in-chennai

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாள்களில் ஒரு ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து, தற்போது ஒரு பேரல் சுமார் 50 அமெரிக்க டாலருக்கு (3,496 ரூபாய்) விற்கப்படுகிறது. இதன் பயனாக, சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் வெள்ளிக்கிழமை ரூ.72.16-க்கும்,  டீசல் ரூ.67.16-க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை பெட்ரோல் 31 பைசாக்கள் குறைந்து ரூ.71.85-க்கும், டீசல் 32 பைசாக்கள் குறைந்து ரூ.66.84 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.44, டீசல் ரூ.1.30 குறைந்துள்ளது. அதாவது  டிசம்பர் 20 -ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.29-க்கும் , டீசல் ரூ.68.14-க்கும் விற்கப்பட்டது.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close