சற்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 10:03 am
share-market-begins-slightly-down-on-tuesday

வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள் சற்று சரிவுடன் தொடங்கின.

வாரத்தின் தொடக்க நாளான நேற்று, மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  334 புள்ளிகள் ஏற்றத்துடன்  36, 029 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 95 புள்ளிகள் உயர்ந்து 10,822 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 96 புள்ளிகள் குறைந்து 35,754 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீ்ட்டு எண்ணும் 39 புள்ளிகள் குறைந்து 10,733 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

இருப்பினும் ஹெச்டிஎஃப்சி, எடில்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தே காணப்பட்டன. அதேசமயம் பஞ்சாப் நேஷனல் வங்கி, யெஸ்பேங்க் உள்ளிட்டவற்றின் பங்கு விலை சற்று குறைந்து விற்பனையானது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close