பெட்ரோல், டீசல்: இரண்டு நாள்களில் ரூ.1.20 உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 07:59 am

today-also-petrol-price-hike-in-chennai

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 20 காசுகள், 30 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது கடந்த இரண்டு நாள்களில் எரிப்பொருள்களின் விலை 1.20 ரூபாய் அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.71.47-க்கும், டீசல் ரூ.66.01-க்கும் விற்கப்பட்டு  வந்தது.
இந்த நிலையில் இன்று, பெட்ரோல் விலையில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.71.67-க்கும், டீசல் 30 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.66.31-க்கும் விற்கப்படுகிறது.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான ஐஓசி-யின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.
கடந்த இரண்டு நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 காசுகளும், டீசல் 61 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.